சூப்பர் வசதியுடன் அறிமுகமாகும் புதிய Raspberry Pi ட்ரோன் கமெரா!
Tuesday, January 17th, 2017ட்ரோன் வகை பறக்கும் கமெராக்களை வடிவமைக்கும் பிரபல நிறுவனங்களுள் Raspberry Pi நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக் கமெராவினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கமெராவில் இருந்து யூடியூப்பின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அற்புதமான வசதி உள்ளடக்கப்பட்டுள்ளளது.
இதற்கு 4G/LTE தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
எனினும் வீடியோ பதிவு செய்யும் நேரத்திற்கும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பாகும் நேரத்திற்கும் இடையில் 25 தொடக்கம் 30 செக்கன்கள் வரை தாமதம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக் கமெராவானது முன்னைய தலைமுறைக் கமெராக்களை விடவும் மிகவும் குறைந்த எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை இதற்கு அடுத்ததாக உருவாக்கப்படவுள்ள ட்ரோன் கமெராவில் GPS தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் !
அதிவசதிகளுடன் அறிமுகமாகும் LeEco Cool 1 Dual
உலகின் மிக பெரிய விமானங்கள்!
|
|