சூப்பர் வசதிகளுடன் வருகின்றது  HTC 11 மொடல் செல்போன்கள்!

Saturday, December 3rd, 2016

உலகளவில் செல்போன் தயாரிப்பில் முன்னனி வகிக்கும் HTC நிறுவனமானது தனது அடுத்த HTC 11 மொடலை விரைவில் விற்பனைக்கு வெளியிடவுள்ளது.

ஏற்கனவே தற்போது விற்பனையில் சக்கை போடு போடும் HTC 10 மொடலை விட பல சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.HTC 11ல் கெமராவை பொருத்த வரை இதுவரை இல்லாத அளவு 24 அல்ட்ரா பிக்சல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள HTC 10ல் 12 அல்ட்ரா பிக்சல் மட்டுமே உள்ளது.

ஸ்னாப் டிராகன் ப்ராசசர் 830 அளவுக்கு பழைய மொடலை விட இதில் உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன்களுக்கு முக்கியமே பேட்டரிகள் தான். அதை பொருத்தவரை 4300mAh பேட்டரி தன்மை இதில் இருக்கும் என தெரிகிறது.

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் அப்டேட்டான Android Nougat இயங்குதளத்தில் இந்த செல்போனானது இயங்கும்.ஸ்கீரின் டிஸ்ப்ளேவானது 5.5 அங்குலத்திலும், டிஸ்ப்ளே ரெசல்யூசன் 2560 x 1440 இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2017ன் ஆரம்பத்திலோ அல்லது நடுவிலோ இந்த செல்போனானது விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: