சீனாவில் மணல் புயல் காரணமாக கடும் பாதிப்பு!

Friday, March 30th, 2018
மங்கோலியா நாட்டில் இருந்து சீனாவை தாக்கும் மணல் புயலினால் உருவான காற்று மாசுவினால் தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மங்கோலியாவின் எல்லையோர பகுதியில் உள்ள கோபி பாலைவனப் பகுதியில் இருந்து சீனாவை மணல் புயல் தாக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த 24 மணி நேரத்துக்கான எச்சரிக்கயின்படி தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து வீசிய மணல் புயலினால் தலைநகர் பீஜிங் மற்றும் டியன்ஜின், ஹேபேய், ஷான்க்சி, ஜிலின், லியோனிங், ஹீலோங்ஜியாங், க்சிஹியாங் ஆகிய மாகாணங்களுக்கு உட்பட்ட சுமார் 15 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு மணல் மற்றும் தூசினால் ஏற்பட்ட மாசு நிறைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related posts: