சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!
Saturday, February 18th, 2017ஸ்மார்ட் போன்கள் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக விளங்கும் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜெய். வை. லீ நேற்று (வியாழக்கிழமை) மாலை தென் கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹையின் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் இவருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட லீ சியொலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதே நீதிமன்றம் லீயை கைது செய்ய வேண்டும் என்ற அரச வழக்கறிஞர்களின் கோரிக்கையை கடந்த மாதம் நிராகரித்தது.
இந்நிலையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் லீ மற்றும் சம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு நிர்வாகியான பார்க் சாங்-ஜின் ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் பார்க் சாங்-ஜின்னை கைது செய்வதற்கான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|