சமூக வலைதளங்கள் குறித்து வெளியான தகவல்கள்!

Monday, July 2nd, 2018

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இணையதளம் பெருமளவில் ஆட்சி புரிந்து வருகிறது. அதில் முக்கியமாக சமூக வலைதளங்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகளவில் 30 சதவித மக்கள் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டதால்இ இன்று உலகம் முழுவதும் சமூக வலைதள தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்களை பார்ப்போம்.

 • உலக மக்கள் தொகையில் சுமார் 420 கோடி என பாதிக்கும் அதிகமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
 • உலகில் சமூக வலைதளங்களை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
 • உலகின் பிரபல நிறுவனங்கள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைதள சேனல்களை பயன்படுத்துகின்றன.
 • வியாபாரம் செய்பவர்களில் 81 சதவிதம் பேர் ஏதாவது ஒரு வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காகவே சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
 • கடந்த 2017ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017ஆம் ஆண்டின் 3வது காலாண்டு வரை மட்டுமே சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12.1 கோடி ஆக அதிகரித்தது.
 • அதன்படி ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைதளத்தில் இணைவதாக தெரியவந்துள்ளது.
 • குயஉநடிழழம ஆநளளநபெநச மற்றும் றூயவளயிp செயலிகளில் தினமும் 6000 கோடி என்ற அளவில் குறுந்தகவல்கள் தினசரி பரிமாறப்படுவதாக தெரிய வந்துள்ளது.
 • கடந்த 2017ஆம் ஆண்டு சமூக வலைதள விளம்பரங்களில் சுமார் 4000 கோடி டொலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.
 • கடந்த 2015ஆம் ஆண்டு வாக்கில் உலகின் 38 சதவித நிறுவனங்கள் சமூக வலைதள செலவினங்களை சுமார் 20 சதவிதம் வரை அதிகரித்து உள்ளன. இது சென்ற ஆண்டை விட 13 சதவிதம் அதிகமாகும்.
 • டிவிட்டரில் குறிப்பிட்ட டீசயனெ மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணிநேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
 • பேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
 • ளுnயிஉhயவ தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
 • 2018ஆம் ஆண்டு மொத்த ஒன்லைன் தரவுகளில் 74 சதவிதம் வீடியோவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களினால் நன்மைகள் ஏற்பட்டாலும் பல தீய விளைவுகளும் உண்டாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: