சகோதரனை காப்பாற்றிய 2 வயது பாலகன் !

Thursday, January 5th, 2017

 

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த போது அலுமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்ற துடித்த இரண்டு வயது அண்ணன் பாவ்டி ஷாஃப், அலுமாரியை சுற்றிவந்து பார்த்து சில நொடி நிதானமாக யோசித்து இறுதியில் அதைத் தூக்கி தம்பியை காப்பாற்றினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவர்களின் அறையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகின. இருவருமே காயங்களின்றி தப்பினாலும் இந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துபோனதாக இவர்களின் தாய் தெரிவித்தார்.

இந்த காட்சிகளை வெளியிட பெரிதும் தயங்கினாலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படும் என்பதனால் தயக்கத்துடனே இதை வெளியிடுவதாக இந்த இரட்டையரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த அலுமாரியை ஆணிகள் மூலம் சுவரோடு இணைத்து விழாமல் செய்திருப்பதாகவும் மற்ற பெற்றோரையும் அப்படி செய்யும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Related posts: