கோடை காலத்தில் மட்டும் உருவாகும் அபூர்வ ஏரி!

Tuesday, April 19th, 2016

ஆஸ்திரியா பள்ளத்தாக்கு ஒன்றில் கோடை காலத்தில் மட்டும் உருவாகும் அபூர்வ ஏரி ஒன்று சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமாக மாறி வருகிறது.

இந்த ஏரியின் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி இப்பகுதியில் புதிதாய் ஏரியாக உருவாகிறது.

இதனால் ஏரி இருக்கும் இப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்வது இல்லை என கூறப்படுகிறது. சுற்றும் ஓங்கி வளர்ந்திருக்கும் பச்சைப்பசேல் மரங்களால் இந்த ஏரியும் பச்சை வண்ணத்திலேயே ஒளிர்கிறது.

பொதுவாக வரண்டு காணப்படும் இந்த பகுதி கோடை காலங்களில் மட்டும் 22 அடி வரை குளிர்ச்சியான நீரால் நிரப்பப்பட்டு சுற்றுலா விரும்பிகளை ஈர்த்து வருகிறது.

கண்ணாடிக்கு ஈடாக காட்சித்தரும் இந்த பச்சை ஏரியின் வனப்பை களங்கப்படுத்தவேண்டாம் என கடந்த ஜனவரி தொடங்கி இப்பகுதி நிர்வாகம் சுற்றுலா விரும்பிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏரியின் அடி ஆழம் வரை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி சென்று வரலாம் என தெரிவிக்கும் சுற்றுலா விரும்பிகள், இங்குள்ள ஒரே குறையாக கருதப்படுவது இந்த ஏரியின் தட்பவெப்பநிலை மட்டுமே. காரணம் இங்கு 6 சி அளவுக்கு கடும் குளிர் காணப்படுகிறது.

மேலும் பகல் பொழுதில் ஏரியின் மத்தியில் நீருக்கடியில் சென்று இயற்கையை ரசிப்பது கொள்ளை இன்பம் என கூறப்படுகிறது.

வானிலை தோதான காலத்தில் இந்த ஏரிக்கு செல்வதே பொருத்தமாக இருக்கும் என்றும், இல்லை என்றால் இந்த ஏரியின் ஒட்டு மொத்த சிறப்பையும் ரசிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

Related posts: