கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு கோரிக்கை!
Saturday, December 5th, 2020நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தம் தாங்கள், 10,000 முதல் 13,000 வரையிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப்பகுதிகளில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங்களில் எழுமாறாக தெரிவு செய்யப்படுபவர்களாவர். இந்த பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர்.
பின்னர அவர்களின் தகவல்களை ஆராயும்போது, தற்போதைய கொத்தணிகளுடன் பெரும்பாலானோருக்கு தொடர்புள்ளமை தெரியவருகிறது.
எனவே, தற்போது கொவிட் பரவல் நிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது. கொவிட் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஊடாக ஏதாவது தலையீடு அவசியமாகும் என்பதுடன் அதற்கு சமாந்தரமாக பொதுமக்களின் தலையீடு அவசியமாகும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது வரையில் கொரோனா வைரஸூக்காக பொதுவான தடுப்பூசி ஒன்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|