கையடக்க தொலைபேசி – வானலை அதிர்வெண் கதிரியக்கம்!

Thursday, February 8th, 2018

கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளியாகும் வானலை அதிர்வெண் கதிரியக்கம் விலங்குகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது.

இதற்குரிய ஆய்வை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் நடத்தியிருந்தது. இந்த ஆய்வுக்காக இரண்டை கோடி டொலருக்கு மேலான தொகை செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வு மாறுபட்ட தகவல்களை தருகிறது. செல்போன் கதிரியக்கம் காரணமாக சிலவகை சிறிய பிராணிகளில் கட்டிகள் ஏற்படும் அபாயமும், திசுக்கள் சேதமடையும் ஆபத்துக்களும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஏனைய விலங்குகளில் தாக்கம் ஏற்படுத்துவதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக மனித சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

Related posts: