கூகுள் மேப்பின் புதிய பதிப்பில் தரப்படும் வசதி!

Sunday, October 2nd, 2016

இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் பல பெறுமதி வாய்ந்த சேவைகளுள் கூகுள் மேப் வசதியும் ஒன்றாகும்.

அறிமுகமில்லாத ஒரு இடத்திற்கு பயணம் செய்யும்போது பெரிதும் உதவியாக இருக்கும் இந்த சேவையினை மொபைல் சாதனங்களில் பெறுவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றமை தெரிந்ததே.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப் புதிய பதிப்பில் குரல் வழி கட்டளைகள் மூலம் கூகுள் மேப்பினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இக் கட்டளைகள் அனைத்தும் Hands Free சாதனம் ஊடாக வழங்கப்படக்கூடியதாக இருத்தலும் விசேட அம்சமாகும்.எனினும் இப் புதிய பதிப்பானது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் iOS சாதனங்களுக்காக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும்.

google-maps-new-interface1-300x169 (1)

Related posts: