கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் பெண்களே: ஆய்வில் தகவல்!

Monday, March 14th, 2016
உலகம் முழுவதும் கூகுள் தேடுபொறியில் ஆண்களை விட பெண்களே அதிக நேரத்தை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூகுள் இந்தியா நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் 35-44 வயது வரையுள்ள நடுத்தர வயது பெண்களே கூகுளில் அதிக நேரம் இருக்கிறார்கள். நடுத்தர வயது ஆண்களை காட்டிலும் 123 சதவீதம் அதிகமாக பெண்களே கூகுளில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக, அழகுக்கலை, பேஷன், ஆரோக்கியக் குறிப்புகள், உடல்நலக்குறிப்புகளை பற்றியே பெண்கள் அதிகம் தேடுகிறார்கள். 15-24 வயது மற்றும் 25-34 வயது பிரிவிலும் ஆண்களை விட பெண்களே கூகுளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உலகில் 325 மில்லியன் பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இண்டர்நெட் பயன்பாட்டில் உலக அளவில் சீனா, அமெரிக்காவை அடுத்து 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

Related posts: