கிலோ கிராமிற்கு புதிய வரைவிலக்கணம் கொடுக்கும்  விஞ்ஞானிகள்!

Thursday, November 22nd, 2018

விஞ்ஞானிகள் இதுவரையிலிருந்த கிலோகிராமிற்கான வரைவிலக்கணத்தை மாற்றி அதை மின்னோட்டத்தினடிப்படையில் வரையறுக்கும் வகையில் புதிய வரைவிலக்கணமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மின் காந்தம் மூலமாக விசை உருவாகின்றது. இவ் விசையானது கிரேன்களில் பழைய கார்கள் முதலிய பாரிய உலோகங்களை மேல்நோக்கி நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மின்காந்தத்தால் உருவாக்கப்படும் இவ் இழுவை விசையானது அதன் சுருள்களினூடு பாயும் மின்னோட்டத்துடன் நேரடித் தொடர்புடையது.

இதன்படி சுருள் மின்னோட்டத்திற்கும் நிறைக்கும் இடையிலுள்ள தொடர்பை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

எனவே கொள்கையளவில் திணிவு அல்லது நிறையானது அதை எதிர்க்கத் தேவையான மின்னோட்டத்தின் அளவில் வரையறுக்கப்பட முடியும்.

கடந்த வெள்ளியன்று வெர்செயில்சில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் கூட்டமொன்றிலேயே இப் புதிய வரைவிலக்கணம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரையில் கிலோகிராமானது ஒரு பிளாட்டினம் துண்டு சார்ந்த எடையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புற்றுநோய் மரணம் அதிகரிக்க 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியே காரணமாம்!
ரயில் ஓட்டுநரின் குழப்பத்தால் அவமானப்பட்ட ஜப்பான் நிறுவனம்!
புதைந்திருக்கும் மர்மங்களின் உண்மைகள் வெளிச்சமானது!
விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்!
யானைகளின் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் அதிர்வுகள்: விஞ்ஞானிகள் சாதனை!