காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு!
Friday, August 10th, 2018காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக, காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்துமாணவர்கள்.
எகிப்தில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர். இக்காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம். ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ., துாரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.
பொதுவாக வாகனங்கள் வாங்க நினைக்கும் பலரும், எரிபொருள் செலவை நினைத்து விட்டு, முடிவை மாற்றிக் கொள்வர். ஆனால் இந்த காரை பொறுத்தவரை அந்த கவலையே இல்லை. ஏனெனில் காற்றில் இயங்குவதால், எரிபொருள் செலவு மிச்சம். சாதாரணமாக ‘கம்ப்ரஸ்டு ஆக்சிஜன் காற்றை’ எரிபொருளுக்கு பயன்படுத்தினால் போதும். மாணவர்கள் குழு, தயாரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு, நிதியுதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|