கவலை வேண்டாம் -வந்து விட்டது புதிய கண்டுபிடிப்பு!

Monday, April 24th, 2017

சுற்றுலா விசாவில் பல நாடுகளை சுற்ற விரும்புவோர் மொழி தெரியாமல் படும்பாடு சொன்னால் புரியாது. இதே பிரச்சனைதான் வெளிநாட்டினர் இங்கு வந்தாலும். இதற்காக நாம் அனைத்து மொழிகளையும் கற்பது என்பது முடியாத விஷயம். இதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ராவிஸ் எனும் மொழிமாற்றிச் சாதனம். ட்ராவிஸ், மொபைல் போன்று காற்சட்டை பையில் அடங்கும் வகையில் சிறிய வடிவில் இருக்கும். நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் (Real Time Translator ) செய்யக்கூடிய வகையில் ட்ராவிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நம் மொழியில் சொல்லும் வார்த்தையை பிற மொழிகளில் அழகாக மாற்றம் செய்து கொடுக்கும் திறன் உடையது. துபற்றி இண்டிகோகோ (Indiegogo) எனும் இணையத்தள பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Related posts: