கலக்சி நோட் 7 க்கு பதிலாக வருகின்றது கலக்சி நோட் 8!

Wednesday, October 26th, 2016

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை இலட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட கலக்சி நோட் 7 ரீசார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிவதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்ததால் சாம்சங் கலக்சி நோட் 7 போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் சாம்சங் கலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு சலுகையை வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அதாவது சாம்சங் கலக்சி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக கூறியுள்ளது. இதன் மூலம் சாம்சங் கலக்சி நோட் 7 மாடலால் வாடிக்கையாளர்களிடம் இழந்த மதிப்பை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சாம்சங் கேலக்சி நோட் 7 போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 88.39 டாலர் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

876644180Samsung2

Related posts: