கமெரா தொழில்நுட்பத்தில் கனோனின் புரட்சி!

Friday, March 2nd, 2018

புகைப்படக் கமெராக்களை வடிவமைப்பதில் பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக கனோன் நிறுவனம் காணப்படுகின்றது.

இந்நிறுவனம் கமெராவில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்தியுள்ளது. இதன்படி கமெராவில் பொருத்தப்பட்டுள்ள Flash ஆனது சிறந்த கோணத்தினை நோக்கி தானாக திரும்பும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

470EX-AI எனும் தான் உருவாக்கிய புத்தம் புதிய கமெராவிலேயே இந்த அதிரடி தொழில்நுட்பத்தினை கனோன் புகுத்தியுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் ஆனது புகைப்படம் எடுக்க வேண்டிய தூரம், நோக்கம் என்பவற்றினை துல்லியமாக கணிக்கின்றது.

அதன் பின்னர் தானாகவே Flash இனை சரிசெய்கின்றது.

இதன் மூலம் நேரச் சிரமம் இன்றி அழகிய புகைப்படங்களை விரைவாக எடுத்துக்கொள்ள முடியும்.


10 ஆண்டுகளின் பின் வரும் 9ஆம் திகதி வானில் நிகழும் அபூர்வம்!
பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் பாதிப்புகள்: அச்சம் வெளிப்படுத்தியுள்ள புதிய ஆய்வு!
ஆஸி. வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் - கிளேன் மெக்ராத்!
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!
குளிர் நிலைக்கு செல்லும் சூரியன் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!