ஒரு கிலோ மனித சாம்பலுக்கு 3 மில்லியன் டொலர்!

Tuesday, August 9th, 2016

அமெரிக்காவில் இறந்தவரின் சாம்பலை நிலவுக்கு கொண்டு செல்வதற்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க வாழ் இந்தியரான நவீன் ஜெய் இறந்தவர்களின் சாம்பலை நிலாவுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனியாக நிறுவனம் ஒன்றை கடந்த 2010 ஆம் ஆண்டில் தனது நண்பர்களுடன் நவீன் ஜெய் தொடங்கினார்.

மேலும், அந்நிறுவனத்துக்கு Moon Express என பெயர் வைத்து, அதை 2017 ஆம் ஆண்டு நிலவில் இறக்குவதற்கான உரிமையை கடந்த வாரம் அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) அனுமதி பெற்றார்.மேலும், ஒரு தனியார் நிறுவனத்தின் ராக்கெட் நிலவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து நவீன் ஜெயீன் கூறியதாவது, பொதுவாக இறந்தவர்களின் எடை 4 முதல் 6 பவுன்டுகள் இருக்கும் என்பதால் 5.4- 8.1 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆகலாம். ஆனால் ஒரு கிலோ மனித சாம்பலுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் என கூறியுள்ளார். மேலும் சிலர் இதற்கான முன்பதிவு பெற்றுவிட்டனர், இதன் பட்டியல் நீண்டுகொண்டெ செல்வதாகவும் கூறப்படுகிறது.

Related posts: