ஒராகிள் நிறுவனம் வைத்தது செக்: தப்பி பிழைக்குமா கூகுள்?

Thursday, March 31st, 2016

அப்பிளிக்கேஷன்களை உருவாக்குவதற்கான சிறந்த பிளாட்போர்ம்களை வழங்கிவரும் பிரபல நிறுவனமான ஒராகிள் ஆனது கூகுள் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை உருவாக்குவதற்காக அனுமதியின்றி ஜாவா (JAVA) கணினி மொழியினை பயன்படுத்தியுள்ளதாக ஒராகிள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கவிருப்பது இது முதல் முறை அன்று, இதற்கு முன்னர் 2010ம் ஆண்டின் பிற்பகுதியில் இதே பிரச்சினைக்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்தன.

எனினும் இப்பிரச்சினை 2012ம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 9.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கோரி ஒராகிள் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: