எகிப்து பிரமிடுகளை விட தொன்மையான பிரமிடுகள் போலந்தில்!

Tuesday, March 22nd, 2016

உலக அதிசியங்களில் ஒன்றாக எகிப்து பிரமிடுகள் விளங்கி வருகிறது. பிரமிடுகள் எகிப்தில் மட்டுமல்ல, சூடான், நைஜீரியா, கிரீஸ், இந்தோனோசியா, மெக்சிகோ உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும்கூட உள்ளன. எகிப்திய பிரமிடுகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாகும்.

சூடானில் கி.மு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது.

எகிப்து பிரமிடுகளை விட 600 ஆண்டுகள் பழமையான பிரமிடுகளை சமீபத்தில் போலந்து நாட்டில்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.போலந்தின் சுலோனோவிஸ் கிராமத்திற்கு அருகே இது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பலவேறு  முக்கோண பெருங்கற்கள் கல்லறைகள் உள்ளன.   இங்கு பெரிய கல் தொகுதிகள் உள்ளன.

போஸ்னியா டாக்டர் சாம் ஓஸ்மானிக் மூலம் மற்றொரு பள்லதக்கில் பிரமிடுகள் கண்டு பிடிக்கபட்டது குறிப்பிடதக்கது. போலந்து பிரமிடுகள் சுமார் 5 மீட்டர் உயரம் உள்ளன.  இந்த காலங்கள் லேசர் ஸ்கேனிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டறியபட்டு உள்ளது.

Related posts: