உலக சாதனைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க காத்திருக்கின்றது. இதன்படி எதிர்வரும் 15ஆம திகதி இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு செலுத்துவதற்கு இஸ்ரோ தீர்மானித்துள்ளது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம திகதி இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு செலுத்துவதற்கு இஸ்ரோ தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேல், கஜகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோளையும், இந்தியா சார்பில் இரண்டும் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 செயற்கைக் கோள்களை ரஷ்யா செலுத்தியது தான் இதுவரை சாதனையாக இருக்கிறது. அதனைவிடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைக்கவுள்ளது. இதற்கு முன்னதாக ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|