உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் போன் அறிமுகம்!
Friday, June 3rd, 2016
உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் செல்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ (Solarin) என்ற பெயரில் அன்ட்ரொய்ட் செல்போனை 14,000 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் இராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்த விதமான சைபர் தாக்குதல்களையும் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கூகுள் தேடுதல் வசதியில் ஓர் அதிரடி மாற்றம்!
புதிய எரிபொருள் இலங்கையில் கண்டுபிடிப்பு!
ஒரே புள்ளியில் அனைத்து நிறங்களையும் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு!
|
|