உலகின் முதலாவது மின் கப்பல் !

Sunday, November 19th, 2017

உலகில் முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் இயங்கும் 70.5 மீட்டர் நீளமும் 600 தொன் எடையையும் உடைய சரக்கு கப்பலை சீனாஉருவாக்கியுள்ளது.

மின்சாரம் மூலம் வாகனங்கள் மட்டும் இயக்கப்படும்  நிலையில், சீனா இச் சாதனையைப் படைத்துள்ளது. இதில் 2000 தொன் சரக்கு ஏற்றப்பட்டு, கப்பலில் பொருத்தப்பட்ட 26 தொன் லித்தியம் மின்கலங்களில், 2 மணி நேரம் மின்சாரம் நிரப்பப்பட்டு(charge)  இயக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் இயக்கும் நிகழ்ச்சி ‘குயாங்ஷு’ ஆற்றில் நடந்தது.  இது மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.

கப்பல் செலவுகளை குறைக்க உதவுவதோடு,  பாரம்பரிய எரிபொருளை விட  மின்சக்தியின் விலையானது குறைவாக உள்ளதாகவும், உருவாக்கியவல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.      மேலும், புதிய எரிசக்தி சரக்குக் கப்பலின் முக்கிய செலவு எவ்வளவு லித்தியம் மின்கலம் கொண்டிருக்கும்என்பதைச் சார்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கப்பலினால் 2,000 தொன்னுக்கும் அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் .

விண்வெளி, தொடருந்து, அறிவியல் என அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா, தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளமைகுறிப்பிடத்தக்கது