உலகின் மிக நீளமான சுரங்க சறுக்குமரம்!

Saturday, August 6th, 2016
Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030

இந்திய தொழிலதிபரான லட்சுமி மிட்டல் ஏற்பாட்டின் பேரில் லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்க சறுக்குமரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதன் நினைவாக இங்குள்ள ராணி எலிசபத் ஒலிம்பிக் பூங்காவில் இந்திய தொழிலதிபரான லட்சுமி மிட்டல் ஏற்பாட்டின் பேரில் மாபெரும் சுரங்க சறுக்கு மரம் வடிவமைக்கப்பட்டது.

பல வளைவுகளுடன் 114.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சறுக்கு மரத்தை சென்றடைய 455 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. லிப்ட் மூலமாக சென்றும் இதன் மேல் பகுதியில் இருந்து சுமார் 20 மைல் தூரம்வரை லண்டன் நகரின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை கண்டு களிக்கலாம்.

மேலும், இந்திய பொறியாளரான அனிஷ் கபூர் மற்றும் செசில் பால்மான்ட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை சறுக்குமரம் உலகிலேயே மிக நீளமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சறுக்கு மரத்தின் மேல் பகுதியில் இருந்து கண்ணாடி பதிக்கப்பட்ட சுவர் மற்றும் கூரை வழியாக சறுக்கியபடியே இறங்கிவர பாதுகாப்பு கருதி மெத்தை மற்றும் தலைக்கவசம் அளிக்கப்படுகிறது.

பல்வேறு வளைவு, நெளிவுகளை கடந்து சில நொடிகளில் தரைப்பகுதிக்கு வந்துசேரும் இந்த சறுக்குமர விளையாட்டு லண்டன்வாசிகளின்.., முக்கியமாக, குழந்தைகளின் மனம்கவர்ந்த பொழுதுப்போக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ளது.பெரியவர்களுக்கு 15 பவுண்ட் மற்றும் சிறியவர்களுக்கு 10 பவுண்ட் கட்டணமாக வசூலிக்கப்பட்டாலும், இந்த தொகைக்கு ஏற்ற ‘திரில்’ அனுபவத்தை கொண்டாட ஏராளமான கூட்டம் இங்கு அலைமோதுவது, குறிப்பிடத்தக்கது.Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030