உலகின் மிகப் பெரிய தேள்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Friday, December 23rd, 2016

உலகில் வாழும் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறிய தேள் இனங்கள் இலங்கையில் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் திணைக்களத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் வாழும் 18 வகை தேள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் திணைக்களத்தின் பேராசிரியர் கீத்சிறி ரணவன மற்றும் தேள்கள் தொடர்பில் உலகில் அதிக ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளரான செக் குடியரசை சேர்ந்த பென்டிசெக் கொவாரி என்பவரும் இந்த ஆய்வில் இணைந்துள்ளார்.

அதற்கமைய உலகில் வாழும் மிகப்பெரிய 9 அடி நீளமான ஹெடோரொடேரஸ் என்ற பெயருடைய தேள் மற்றும் ஒரு சென்றி மீற்றர் அளவு நீளமுடைய சாமுஸ் சரலதியேல் என்ற தேள் இனங்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன.

மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது உறுதியாகி உள்ளதாக ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சஞ்சீவ ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தேள்களை மக்கள் கொலை செய்கின்றமையினால் அந்த இனம் அழிவிற்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: