உலகின் பழமையான படிமங்கள் கிரீன்லாந்தில் கண்டுபிடிப்பு!

பூமியின் மிகப் பழமையான படிமங்கள் என நம்பப்படும் ஒன்றை, கிரீன்லாந்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூன்றரை பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த பாறைகளின் அலை வடிவங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.இந்த படிமங்களானது, ஸ்ட்ரொமடொலைட்ஸ் என்னும் நுண்ணுயிர்களால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், 200 மில்லியனிற்கும் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு ஆஸ்திரேலியாவில் உயிர்கள் வாழ்ந்ததற்கான பழமையான ஆதாரத்தை காட்டிலும் இந்த படிமங்கள் மிஞ்சியதாக இருக்கும்.
இந்த கண்டுபிடிப்பானது சர்வதேச அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது
Related posts:
பாவற்காய் விதை புற்றுநோயை குணமாக்கும் - போராதனை பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு
பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி!
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்! ஆபத்து யாருக்கு!
|
|