உலகின் பணக்காரராக தொடர்கிறார் பெசோஸ்!

Friday, June 22nd, 2018

உலகின் பணக்காரர் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்தார் பிரபல இணைய விற்பனைத் தளமான அமேசனின் நிறுவுனர் ஜெப் பெசோஸ். போர்ப்ஸ் பத்திரிகை உலகின் மிகவும் பணக்காரர் பட்டியலை இடையிடையே புதுப்பித்து வெளியிட்டுக் கொண்டிருப்பது வழமை.

நேற்று முன்தினமும் உலகின் பணக்காரர்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமேசன் நிறுவுனர் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்தார்.

141.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் முதலிடத்தில் உள்ளார் ஜெப். இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 92.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள். முகநூல் நிறுவுனரான மார்க் 74.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஆசியாவின் பணக்காரர் என்று அறியப்படும் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 39.6 பில்லியன் டொலர்களுடன் 22 ஆவது இடத்தில் உள்ளார்.

Related posts: