உயிரை காப்பாற்ற பொலிஸாரை உதவிக்கு அழைத்த திருடன்!
Wednesday, August 17th, 2016கனடாவில் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையடிக்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருந்து தப்பிக்க திருடன் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவர் நகரில் உள்ள Matthews Avenue குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கூரை மீது ஏறிய 51 வயதான நபர் அங்குள்ள ஸ்கைலைட் வழியாக வீட்டிற்குள் குதிக்க முயன்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராமல் கால் தடுக்கி விழுந்த அவர் கூரை மீது உருண்டுச் சென்றதில் அவருடைய கால் மாட்டியுள்ளது.நீண்ட நேரம் போராடியும் 25 மீற்றர் உயரத்திலிருந்து அவரால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியவில்லை. வேறு வழியில்லாத காரணத்தினால் 911 என்ற எண்ணை தொடர்புக்கொண்டுள்ளார்.
மறுமுனையில் பொலிசார் பேசியபோது, ஒரு வீட்டின் கூரையில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாகவும், உடனே வந்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.தகவலை பெற்ற பொலிசார் தீயணைப்பு வீரர்களை அழைத்துக்கொண்டு சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர், வீட்டின் கூரை மீது சிக்கியிருந்த அந்த திருடனை பொலிசார் பாதுகாப்பாக கீழே அழைத்து வந்துள்ளனர்.நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுப்பட்டவர் எனத் தெரியவந்ததால் அவரை பொலிசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
|
|