உயிரைக் காக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்!

Tuesday, July 11th, 2017

மனித உயிர்களை காக்கக்கூடிய மற்றுமொரு ஸ்மார்ட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கரில் இந்த வசதி தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஏற்படக்கூடிய அபாய நிலைமைகளின்போது பொலிஸாருக்கு தானாக தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைக்கக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பான தகவலை அமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். தற்போது 911 என்ற அமெரிக்க பொலிஸ் அவசர இலக்கத்திற்கு மாத்திரம் அழைப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. எனினும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்ப அவசர அழைப்பு இலக்கத்தினை மாற்றியமைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: