உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டிசேர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது!
Wednesday, September 14th, 2016உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டிசேர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கொரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த அதி நவீன டிசேர்ட்டுகளை தயாரித்துள்ளனர்.
இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிசேர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டிசேர்ட்டில்’ ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 மைக்ரோ வட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
Related posts:
2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனி டெல் வெலே தெரிவானார்!
வாட்ஸ்அப் ஐஃபோன்களுக்கு புதிய வசதி!
பேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது ரோபோ!
|
|