இளநரைக்கு விரைவில் வருகிறது மாற்றுத் தீர்வு!

Thursday, March 22nd, 2018

தற்போதுள்ள இளம் வயதினர் முதல் முதியோர் வரை இளநரையை விரும்புவதில்லை.

எனினும் இவ்வாறான நரையை போக்குவதற்கு முற்றுமுழுதான மருத்துவ தீர்வு எதுவும் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. மாற்றாக செயற்கையான டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றினால் நிரந்தரமான தீர்வு கிடைக்காததுடன், பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு கிரபீனைப் பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் முன்வந்துள்ளனர்.

வைரத்தின் ஒரு பகுதியாக பூமியில் இருந்து எடுக்கப்படும் கிரபீன் ஆனது கறுப்பு நிறத்தினை உடையது.இதனைப் பயன்படுத்தி தலை முடியின் புறப் பகுதிக்கு ஓவர்லேப் செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நோர்த்வெஸ்டேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இம் முயற்சியில் இறங்கியுள்ளனர்

Related posts: