இலங்கையில் அரியவகை அணில் !

Thursday, January 4th, 2018

இலங்கையில் அரணாநாயக்க செலவ பில்லேவ பிரதேசத்தில் அபூர்வமான வெள்ளை நிற அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை வீட்டார் மீட்டு அதனை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் வெள்ளைநிற அணில் குட்டியினை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சாதாரண அணில்கள் உள்ள போதும் இவ்வாறு அணில்கள் காணப்படுவது மிகவும் அபூர்வம் என வனஜீவராசிகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: