இலங்கையில் அதிக மழை பெய்ய இதுவே காரணம்- நாசா வெளியிட்ட தகவல்!

Tuesday, June 13th, 2017

உலகம் வெப்பமடைவதன் காரணமாகவே இலங்கையில் அதிக மழை பெய்ய காரணம் என சர்வதேச விண்வெளி ஆராய்சி மையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாசா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை உள்ளிட்ட வெப்ப வலய நாடுகளில் அண்மைக் காலமாக அதிகளவு மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகம் வெப்பமடைந்து வருவதன் காரணமாகவே இவ்வாறு அதிக மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகின் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது