இறுதிச்சடங்கில் உயிர்பெற்ற குழந்தை!

Tuesday, July 4th, 2017

இறந்ததாக மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்ட குழந்தை, இறுதிச் சடங்கின் போது உயிர் பெற்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் வாராங்கல் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, உடல்நலக் குறைவு காரணமாக 450 கிராம் எடைக்குச் சென்றதால் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை, நேற்று காலை 11.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர், குழந்தையின் இறப்பை உறுதி செய்து, இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளார்.அடுத்த 2 மணி நேரத்தில், குழந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்துள்ளனர்.இதன்போது, குழந்தையின் உடலில் அசைவுகள் ஏற்பட்டதைக் கண்டுள்ளனர்.உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதையடுத்து, மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Related posts: