இரத்தமாக மாறுகிறது நிலவு!

Friday, January 26th, 2018

 

எதிர்வரும் 31ஆம் திகதி முழு பௌர்ணமி தினத்தன்று வானில் தோன்றும் நிலாவை Super blood moon என நாசா நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளது.

அன்றையதினம் உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள் இம் மாற்றத்தினை அவதானிக்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

பௌர்ணமி தினத்தில் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும். இவ்வாறான நிறமாற்றம் பூமிக்கு மிகவும் நெருக்கமாக நிலவு வரும் போது ஏற்படுவதாக நாசாநிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை தோன்றும் நிலவு, வழமையான தினங்களை விடவும் மிகவும் பெரிதாக காட்சியளிக்கும். இவ்வாறான நிகழ்வு இரண்டரை வருடங்களுக்குஒருமுறை ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

 

Related posts: