இன்று நிலவு சூரியனுக்கும் புவிக்கும் குறுக்காக பயணிக்க ஆரம்பித்துள்ளது

Wednesday, March 9th, 2016

இந்தோனேசியா மற்றும் பசுபிக் வலய நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் சூரிய கிரகணத்தை அவதானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் உள்ளுர் நேரப்படி காலை 6.19 அளவில் நிலவு, சூரியனுக்கும், புவிக்கும் குறுக்காக பயணிக்க ஆரம்பித்துள்ளது

நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கும் பட்சத்தில் இருள் சூழும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்றைய சூரிய கிரகணத்தை இந்தோனேசியா, மத்திய பசுபிக் வலயம், அவுஸ்திரேலியாவின் சில பகுதிகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் சிலவற்றில் முழுமையாக அவதானிக்க கூடியதாக உள்ளது

சுமாத்ரா, பார்னியோ, மற்றும் சுலாவெசி ஆகிய பிராந்தியங்களில் 150 கிலோமீற்றர் தொலைவைக் கொண்ட பகுதிகள் 4 மணித்தியாலங்கள் வரை இருளில் மூழ்கி இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

ஜி.எம்.ரி. நேரப்படி 00:15 க்கு ஆரம்பித்து முழுமையான சூரிய கிரகணம் ஜி.எம்.ரி 01:59 க்கு இடம்பெறும் என வானியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சூரிய கிரகணத்தை நோக்குவதாயின் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.