இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட அகத்தியர் சிலை!

Friday, January 31st, 2020

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் போது அங்கு அகத்தியர் சிலை மற்றும் நந்திதேவர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலைகள் எவ்வாறு இங்கு புதைக்கப்பட்டது என்று விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதற்கு முன்னரும் இந்தோனேஷியாவில் இவ்வாறு பல இடங்களில் இந்து கடவுள் சிலைகள் கிடைக்கப்பெற்றது எப்பதும் நாம் அனைவரும் அறிந்த வியமாகும்.

குறித்த சிலைகள் இங்கு கிடைக்கபெற்றதால் இந்தோனேஷியாவில் சோழவம்சம் ஆட்சி செய்த பகுதி என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் தொல்லியல் துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: