இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை!

Thursday, July 5th, 2018

இணையத்தள பாவனையாளர்கள் அனைவருக்கும் ஜிமெயில் தொடர்பாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்திட்டம் மற்றும் விலைகள் தொடர்பான தகவல் சேவை குறித்து கூகுள் நிறுவனத்தின் மூலம் மூன்றாம் தரப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூகுள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் தகவல்களை வாசித்தல் அதேபோன்று சமர்ப்பிக்கப்படும் தகவல்களை அழித்துவிடுவதற்கு இந்த தரப்பினருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமது கொள்கைக்கு முரண்பட்டதல்ல என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமது பயனாளிகளின் தரவுகளை பயன்படுத்தும் அபாயகரமானதாக இந்த சந்தர்ப்பம் இருப்பதாக இந்த நிறுவனம மூன்றாம் தரப்பினர் தொடர்பில் செயற்படும் முறை புதுமையானது என்று சர்வதேச விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஜிமெயில் என்பது உலகப்புகழ் பெற்ற மின்னஞ்சல் சேவையாகும். உலகம் முழுவதிலும் 1.4 பில்லியன் பேர் ஜிமெயில் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: