ஆறுதல் வெற்றி பெறுமா அவுஸ்திரேலியா?
Thursday, November 24th, 2016தென்ஆபிரிக்காவுக்கு எதிராக முதல் 2 டெஸ்டில் தோற்று தொடரை இழந்த அவுஸ்திரேலியா, இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டு பிளசிஸ் தலைமையிலான தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்கா முதல் 2 டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது . பேர்த் டெஸ்டில் 177ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ஹோபர்ட் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் இன்று 24- ம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. தென்ஆபிரிக்கா அணி முதல்முறையாகவும், அவுஸ்திரேலியா 2-வது தடவையாகவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. ஒட்டு மொத்தில் நடைபெறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் ஆகும்.
முதல் 2 டெஸ்டில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலாவது வென்று ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்வியால் அவுஸ்திரேலிய அணியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். 3 புதுமுக வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்கள். வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது.
தென்ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹெட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி ‘வெள்ளையடித்த’ வேட்கையில் உள்ளது.
Related posts:
|
|