ஆப்ரிக்காவில் 89 கரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!

Monday, July 2nd, 2018

லெசோதோ நாட்டின் மோதே வைர சுரங்கத்திலிருந்து 89 காரட் மஞ்சள் வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இதற்கு முன்னர் 25 காரட் அளவிலான மஞ்சள் வைரமே கிடைத்திருப்பதாகவும் தற்போது தான் 89 கேரட் அளவிலான மஞ்சள் வைரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரத்தின் காப்புரிமையில் 70 சதவீதம் லுகாபாவிற்கும் எஞ்சிய பகுதி லெசோதா அரசிற்கு சொந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட மஞ்சள் வைரத்தின் மதிப்பு 10 மில்லியன்பவுண்ட் ஸ்டெர்லிங் ( இந்திய மதிப்பில் ரூ. 90 31 62 562.20 ) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: