ஆபத்தான நிலையில் உலகம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் விளக்கம்!

Sunday, March 12th, 2017

உலகை பாதுகாப்பதற்காக உள்ள இறுதி செயற்பாடு குறித்து, மிகவும் அறிவாளியான நபராக கருதப்படும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது உலகின் பல பாகங்களில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெளிவாக அறிந்துக் கொண்டும் மக்கள் அமைதியாக உள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தை மனிதன் தவறான முறையில் பயன்படுத்துவதனால் மனித இனம் அழிந்து செல்லும் பாரிய அளவு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்காக உலகின் பல மிக்க மனிதர்களினால் நாளுக்கு நாள் பாரிய அளவிலான அணு ஆயதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

உலகம் மிகவும் மோசமான ஆபத்தை ஏட்டியுள்ளது. அது குறித்து உலக மக்கள் உரிய அவதானத்தை செலுத்துவதில்லை. யுத்த ஆயுதங்களின் அதிகரிப்பு, ரோபோ உற்பத்தியின் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், மனிதனின் தொழில் வாய்ப்புகளை ரோபோ பறித்துக் கொள்வது, உணவு பொருட்கள் வீணாகி போவது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் மனிதன் அவதானம் செலுத்தாமல் இருப்பது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

பூமியில் தற்போது பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு இன்மையினால், மனிதர்கள் பலர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உலக பணக்காரர்கள் இது தொடர்பில் அவதானம் மேற்கொண்டு அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் உலக மனிதர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இணைவதே இதனை தடுப்பதற்கான ஒரே வழி. மக்கள் அனைவரும் இணையும் போது பலமிக்க தலைவரே அனைவரையும் கட்டுப்படுத்த வேண்டும் என ஸ்டீபர் ஹோக்கிங் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: