அறிவியலை முந்தியதா ஆன்மிகம்?

Sunday, September 25th, 2016

திருநள்ளாற்றில் சிறப்பு என்றால் அது நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுடைய கோயில் தான். அங்கு அன்றி வேறு எங்குமே அவருக்கு கோயில் கிடையாது.

சில வருடங்களுக்கு முன்பு விண்வெளியில் நாசா செலுத்திய செயற்கைக்கோள் ஒன்று, ஒரு குறிப்பிட்ட இடத்தில் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்றது. பிறகு, தன் பயணத்தை தொடர்ந்தது. அப்படி நிற்பதற்கு முன்பும் பின்பும் அதில் எந்த பழுதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால், அந்த விண்கலம் நிற்பதற்கு காரணம் ஏதோ புறவிசைதான் என்பதை நாசா புரிந்துகொண்டது. கண்ணுக்குத்தெரியாத அந்த புற விசையை ஆராய விரும்பியது.

ஸ்தம்பித்த இடத்திற்கு மேலே அண்டவெளியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால், கீழே பூமியில் என்ன இடம் இருக்கிறது என்பதை ஆராய முற்பட்டது.

அது, இந்தியாவின் தென்பகுதியில் தமிழகத்தில் ஒரு உள் மாநிலமாக இருக்கும் புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் (ஸ்ரீ தர்ப்பநேஷவரர்) கோயில்தான். என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடம் நாசாவால் பலமுறை வந்து ஆராயப்பட்டது. அந்த இடத்தில் மட்டும், விண்ணிலிருந்து வரும் கருநீல கதிர்களின் வீழ்ச்சி இருக்கிறது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ மற்ற இடங்களிலோ அப்படி இல்லாதது வியப்பு.

அந்த இடம் காடு, மலை போன்ற ஒரு இடமாக இருந்திருந்தால், நாசாவால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கதிர்வீச்சு சக்திமிக்க ஒரு இடமாக முக்கியப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால், அங்கு கோயில் அமைந்திருந்தது. அது ஏற்கனவே நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு முக்கியப்படுத்தப்பட்டதற்கான அடையாளம். அதனால், நாசா விஞ்ஞானிகளே நம் முன்னோர்களை நினைத்து ஆச்சரியம் அடைந்தனர்.

இப்போதும் எந்த செயற்கைக்கோளாக இருந்தாலும் அந்த இடத்தை கடக்கும்போது, 3 வினாடி நேரம் ஸ்தம்பித்துச் செல்வதாக கூறப்படுகிறது.

கருநீல கதிர்களின் வீழ்ச்சி இருப்பது தெரிந்துவிட்டாலும், அந்த கதிர்களின் மூலம் எது? என்பது அடுத்த கேள்வி. சனி கிரகத்திலிருந்து அந்த கதிர்கள் வருகிறதா?

நுட்பமான அறிவியல் கருவிகள் ஏதும் இல்லாத காலத்தில் திருநள்ளாறு பகுதியில் கதிர்வீச்சு இருப்பதை ஏதோ ஒரு வழியில் உணர்ந்திருந்தாலும் அந்த கதிர்கள் எங்கிருந்து வருகிறது என்பதை அறிவது சாதாரண விசயம் அல்ல.

அதிலும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சி நாளன்று அந்த இடத்தில் கதிர்வீச்சின் அடர்த்தி அதிகம் இருப்பது எப்படி கண்டுபிடித்து சரியான காலத்தொடர்பு செய்தனர்.

கோயில்களில் நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உடுத்தப்படும் ஆடையின் நிறங்களும் முறையான விதிமுறைகளைக் கொண்டது. அந்த நிறங்கள் இப்போது விஞ்ஞானம் கூறும் அந்த கிரக நிறங்களுக்கு பொருந்தி இருப்பது ஆச்சரியம்தான்.

நாசாவில் அதிகமான இந்தியர்களும் பணிசெய்கின்றனர். நாசாவை சார்ந்த வெளிநாட்டவர்களே கதிர் விழும் குறிப்பிட்ட இடத்தில் கோயில் இருப்பதை நினைத்து புரியாத புதிராக வணங்கியும் சென்றுள்ளனர்.

அண்டவெளி நுட்பங்களை கருவிகள் துணையோடு கண்டுபிடிப்பதில் இத்தனை கால அறிவியல் வளர்ச்சி என்ற உயர்ந்த மேடை இருக்கிறது. அறிவியல் துணையில்லாமல் தனிமனித சக்தியால் இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அது நம்மால் இன்னும் அறிந்துகொள்ள முடியாத புதிரான ஒரு சக்தி, நம் முன்னோர்களில் சிலருக்கு இருந்திருப்பது உண்மைதான்.

அடுத்து, அத்தகைய சக்தி அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது மற்றொரு கேள்வி. அந்த சக்தியின் பண்பு எல்லோருமே பெறக்கூடிய வழிமுறையைக் கொண்டதா? அல்லது சில மனிதருக்கு மட்டும் அப்படி தானாக அமைந்ததா?

அவர்கள் ஏன் அதை வெளிப்படையாக சொல்லாமல் மர்மமாக்கினார்கள். சாதாரண விஷயங்களை கண்டுபிடித்தவர்களே தங்கள் பெயர்களை உரிமை பதிவு செய்துகொள்ளும்போது. இவ்வளவு பெரிய பிரபஞ்ச அநுமானத்தை கொடுத்துவிட்டு தங்கள் பெயரை இருட்டடிப்பாக்கிகொள்ள காரணம் என்ன?

மதிப்பிட முடியாத முன்னோர்களின் தொலைநோக்கு மதிநுட்பம் தமிழகத்தில் மட்டுமல்ல, காஸா பிரமிடுகள் உட்பட்ட உலகின் பல படைப்புகளில் அறியப்படுவது அதிசயமே!

அப்படிப்பட்ட முன்னோர்களின் ஞானத்தை நினைத்து உலக அரங்கில் பெருமைப்பட்டுக்கொள்வது அர்த்தமானதுதான். ஆனால், அதை வைத்து பல மூடப்பழக்கங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயல்வது அர்த்தம் இல்லாதது.

முன்பு இருந்து இப்போது இல்லாமல் போன மனிதனுக்குள் புதைந்திருக்கும் ஒப்பற்ற சக்தி மீதான ஆராய்ச்சி விண்வெளி ஆராய்ச்சியைவிட மகத்துவமானது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: