அப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி!

Tuesday, October 4th, 2016

ஊடாடும் (Interactive) தொழில்நுட்பம் என்பது வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப வருவிளைவுகளை (Output) தரக்கூடியதாக இருத்தல் ஆகும்.

இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones Book எனும் புத்தகத்தினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.Game Of Thrones Book ஆனது அமெரிக்காவினை சேர்ந்த George R.R. Martin எனும் எழுத்தாளரினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும்.

இக் கதை உருவாக்கப்பட்டு இவ் வருடத்துடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதேவேளை இக் கதையினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones எனும் கணணி ஹேமும் உருவாக்கப்பட்டு பிரபல்யம் அடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இக் கதையின் ஆசிரியரான George R.R. Martin இன் ரசிகர் ஒருவர் அப்பிள் நிறுவனத்துடன் இணைந்து ஊடாடல் தொழல்நுட்பத்துடன் கூடிய புத்தகத்தினை வெளியிடவுள்ளார்.

apple_hack_-e1456481363502

Related posts: