அன்ரோயிட் இயங்குதளத்தில் கூகுளின் புதிய பதிப்பு!

Friday, March 24th, 2017

உலகில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் காணப்படுகின்றது. முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இவ் இயங்குதளமானது பல பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது. Android O எனும் இவ் இயங்குதளத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டறியும் முகமாக டெவெலாப்பர் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மொபைல் சாதனங்களின் பற்றறிப் பயன்பாட்டினை அதிகரித்தல் உட்பட மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Oreo எனும் உணவுப் பொருளில் உள்ள O எனும் எழுத்தினை பயன்படுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட பதிப்புக்களுக்கும் உணவுப்பொருட்களின் பெயர்களையே கூகுள் இட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: