அனைவரையும் கவர்து இழுக்கும் கூகுளின் புதிய தேடல் வசதி!

Friday, December 15th, 2017

கூகுள் தேடல்களை புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் புதிய அம்சத்தை கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளில் பிரபலங்களை தேடினால் வழக்கமான டெக்ஸ்ட் பதில்களுக்கு  மாற்றீடாக செல்ஃபி வீடியோ பதில்களை வழங்கும் வகையில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இனி கூகுளில் பிரபலங்களிடம் கேள்விகளை எழுப்பும் போது செல்ஃபி வீடியோ மூலம் கூகுள் பதில் வழங்கும்.

இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அம்சம் முக்கிய நாடுகள் உடபட உலகம் முழுவதுமாக விஸ்தரிக்கப்படுமான என்ற கேள்வி நிலவி வருகின்றது. மொபைல் மூலமான தேடல்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவர் பதில் கூறுவார் என கூகுளின் வலைதளத்தில் பிரசுரமாகியுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் முதல் நகர்வாக பிரியண்கா சோப்ரா, வில் ஃபெரெல், டிரேஸ் எல்லிஸ் ராஸ், கினா ரோட்ரிகியூஸ், கெனான் தாம்சன், அலிசன் வில்லியம்ஸ், நிக் ஜோனஸ் மற்றும் சில பிரபலங்கள் மூலமாக இந்த அம்சம் வழங்கப்படுகின்றது முதலேபதிவிடப்பட்ட வீடியோக்கள் என்பதால் அதிகமானோர் வினாவ எத்தணிக்கும் பொதுவான கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் அளிப்பது போன்றதான அம்சம் இடம்பெறுகின்றது.

அமெரிக்காவை மட்டுமே இலக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள இந்த அம்சமானது எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படுமா என்பது தொடர்பான தகவல்கள் எவையுமே வெளியாகவில்லை, மேலும் இந்த அம்சமானது, பிற சந்தைகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதோடு, அதிகமான பிரபலங்களையும் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts: