அதிரடி வசதியுடன் வாட்ஸ் ஆப்!

Thursday, July 20th, 2017

வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது.

அண்மையில் மேலும் பல கோப்பு வகைகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியினை வழங்கியிருந்தமை தெரிந்ததே.இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை குறித்த ஆப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் யூடியூப் வீடியோக்களின் இணைப்புக்களை பரிமாறிக்கொள்ளக்கூடியதாக இருந்த போதிலும் அவ்வீடியோக்களை அப்பிளிக்கேஷன்களுக்கு வெளியே யூடியூப் அப்ளிக்கேஷனில் பார்க்க முடியும்.ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ் ஆப் ஆப்பிளிக்கேஷனுக்கு உள்ளேயே பார்த்து மகிழ முடியும்.இவ் வசதியானது தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: