அதிக விலையுடைய வெள்ளைநிற வைரம் ஏலத்தில்!

Saturday, February 10th, 2018

உலகின் லண்டன் நகரில் மிகவும் பெறுமதி வாய்ந்ததான 102 கரட் எடைகொண்ட வைரம் இந்த மாதம் ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் நகரில் 2013ஆம் ஆண்டில் ஒரு கரட் எடைகொண்ட வெள்ளைநிற வைரம் சுமார் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனைசெய்யப்பட்டிருந்தது.

இதுவே உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளைநிற வைரக்கல் என்று அறியப்பட்டது. இதேவேளை இந்த சர்வதேச சாதனையை லண்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள வெள்ளைநிற வைரக்கல் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வைரக்கல் ஹொங்கொங்கில் விற்பனை செய்யப்பட்ட வைரக் கல்லை விடவும் 100 கரட் அதிக எடைகொண்ட அமெரிக்காவின் மாணிக்க ஆய்வுநிறுவனத்தினால் லண்டனில் ஏலவிற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.