அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்த ஓவியம்!

Saturday, November 18th, 2017

இத்தாலியின் பிரபல ஓவியரான லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்து ஓவியம் 450 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உலகத்தின் ரட்சகர் என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியங்களில் ஒன்றாகும்.தற்போது இந்த ஓவியம்தான் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்னும் சாதனை படைத்துள்ளது. ஏலம் 300 மில்லியன் டாலரைத் தாண்டியபோதே ஏலத்தில் பங்கேற்றவர்கள் கரவொலி எழுப்பி தங்களது பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர்.

ஏலத்தின் இறுதியில், கிறிஸ்டி என்ற நிறுவனத்தால் 450.3 மில்லியன் டொலருக்கு எடுக்கப்பட்டது. ஆனால், இதனை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை அந்நிறுவனம் வெளியிடவில்லை.இயேசு நீல நிற வண்ணத்தில் ஆடை அணிந்து ஆசிர்வதிப்பது போல உள்ள இந்த ஓவியம், 26 அங்குலம் உயரம் கொண்டது.

Related posts: