அணு உலைக்குள் நீந்திச் செல்லும் சிறிய ரோபோ

Saturday, June 24th, 2017

2011 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையோரப் பகுதியை ஆழிப்பேரலை தாக்கியபோது 18 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தையும் இந்த ஆழிப்பேரலை தாக்கி செர்நோபில் அணுமின் நிலைய பேரழிவுக்கு பின்னர் மிக மோசமான அணு விபத்தை உருவாக்கியது.  இந்த அணு உலையின் பகுதிகள் இன்னும் அதிக அளவு கதிர்வீச்சு உடையதாக விளங்குகிறது. இதனை சுத்தப்படுத்த ரோபோக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இதனால் அணு உலையில் நீர் புகுந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய ‘சிறிய சூரியமீன்’ என்று அழைக்கப்படும் நீந்துகின்ற ரோபோ ஒன்றை தோஷிபா நிறுவனமும்இ விஞ்ஞானிகள் குழுவினரும் சேர்ந்து வடிமைத்திருக்கிறார்கள். இதன் விளக்குகள் பின் பகுதியில் இருந்து முன் நோக்கி செல்லும் திறமையுடையவை.

ஒரு றொட்டியின் அளவை ஒடைய இந்த ரொபோ நீரில் விட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கப்பலில் நடத்தப்பட்ட ஒத்திகை ஆய்வில் இந்த ‘சிறிய சூரியமீன்’ ரோபோ மெதுவாக நகர்ந்து சென்றுள்ளன.

இதனை விஞ்ஞானிகள் குழுவே இயக்குகின்றனர். அத்துடன் ரோபோ எடுக்கின்ற படங்கள் தரவுகளை அனுப்புவதற்கு தரவுக் கேபிள் ஒன்று எப்பொழுதும் விஞ்ஞானிகள் குழுவோடு இணைக்கப்பட்டிருக்கம். இந்த சிறிய கருவிக்கு இது கடுமையான பயணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: