அட்டகாசமான வசதிகள் சிலவற்றினை யூடியூப்!

cover jpg Friday, March 2nd, 2018

யூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.

இதன்படி சட் ரிப்ளை வசதி, தான்னியக்க முறையிலான ஆங்கில கேப்ஷன் வசதி, மொபைல் சாதனங்கள் ஊடான நேரடி ஒளிபரப்பின்போது இருப்பிடத்தினை டேக் செய்தல் உட்பட மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதிகள் பிரம்மண்டமான மியூசிக் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தல், விளையாட்டுக்கள், விஞ்ஞான நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கம்பியூட்டர் ஹேம் போன்றவற்றினை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பெற்றுக்கொள்ள முடியும்.

தவிர நேரடி ஒளிபரப்பு முடிவடைந்த பின்னரும் இவ் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் மேற்கண்ட வசதிகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.