SMS ஊடாக மின்சார பட்டியல் – மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை!
Sunday, December 27th, 2020மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் e-mail ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிநுட்பத்தின் கீழ், பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீற்றர் ஊடாக அலுவலகத்திலிருந்தே மின் கட்டணத்தை தயார் செய்ய முடியுமென, மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மின்மானி வாசிப்போர் அல்லது மின்பட்டியலை விநியோகிப்பவர்கள் தொழில்வாய்ப்பை இழக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அடுத்த வருடத்திலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய தொலைக்காட்சிகளே வடக்கு, கிழக்கை சீரழிக்கிறது – ஜனாதிபதி குற்றச்சாட்டு!
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர் ஹெகலிய அறிவிப்பு!
|
|